கோவையில் திமுக கட்சியின் சார்பாக மிகப் பிரம்மாண்டமான முப்பெரும் விழா.

கோவையில் திமுக கட்சியின் சார்பாக மிகப் பிரம்மாண்டமான முப்பெரும் விழா. விழாவில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா இந்திய கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் வெற்றியைத் தேடித் .தந்த தலைவருக்கு பாராட்டு விழா என சிறப்பு வாய்ந்த விழாவாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்ற வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. வேல்முருகன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் திரு. ஈஸ்வரன் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் திரு .ஜமாத்துல்லா அவர்கள் மறுமலர்ச்சி திராவிட கழக செயலாளர். திரு துரை வைகோ அவர்கள் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் திரு.காதர் மைதீன் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு .தொல் திருமாவளவன் அவர்கள் ஆசிரியர் .திராவிட கழக தலைவர் திரு கீ. வீரமணி அவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் திரு. முத்தரசன் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மேலும் தொகுதிகளில் வெற்றிகண்ட 40 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகுதிரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசினை வழங்கி அனைவரையும் கௌரவித்தார்.இறுதியில் பேச தொடங்கிய தமிழக மாண்புமிகு முதலமைச்சர் திரு .ஸ்டாலின் அவர்கள் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களும் தமிழக மக்கள் நலனுக்காக குரல் சிறுபான்மை மக்கள் நலன் பாதுகாக்க பட வேண்டும் என கேட்டுக்கொண்டு சிறப்புரையாற்றினார்.இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி முக்கிய நிர்வாகிகள் மாநிலத்தின் எல்லா மாவட்டதில் இருந்தும் வந்த கட்சிழ தொண்டர்கள் ஒரு லட்சத்திற்கு மேலானோர் கலந்து கொண்டனர்.