நாய் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு
சேலம் மாநகராட்சியுடன் இணைந்து ரெஸ்க்யூஇங் அனிமல்ஸ் இன் நீட் தொண்டு நிறுவனம், வரும் ஜூன் 26 காலை 8 மணி முதல் 11 மணி வரை வார்டு 45-ல் உள்ள பொதுநல பிரியர் சங்க வளாகத்திலும், கொண்டலாம்பட்டி மண்டல அலுவலக வளாகத்திலும் ரேபீஸ் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமினை பயன்படுத்தி, பொதுமக்கள் தங்கள் வளர்க்கும் நாய்களுக்கு கட்டணமின்றி தடுப்பூசிப் போட்டுக் கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

