கோவை மாநகரில் போலீசார் இடமாற்றம்
கோவை மாநகர போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட 20 போலீஸ் நிலையங்கள், 4 மகளிர் போலீஸ் நிலையங்கள், மேற்கு மற்றும் கிழக்கு போக்குவரத்து போலீஸ் பிரிவு ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் பணியாற்றி வரும் 39 சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீஸ் ஏட்டு, காவலர்கள் உள்பட 78 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட போலீசார் பட்டியலில் 20 பேர் பெண்கள் ஆவர்.
தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய போலீசார் மாநகருக்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

