பெண்களுக்கான சிறப்பு சேமிப்பு திட்டம்

பெண்களுக்காக 'மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்' என்ற சிறப்பு சேமிப்பு திட்டத்தை மத்திய அரசு அளித்து வருகிறது. குறுகிய காலத்திற்கான இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.5% வட்டி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பெண்கள் அல்லது பெண் குழந்தைகள் ₹1,000 முதல் ₹2,00,000 வரை முதலீடு செய்ய முடியும். இதன் முதிர்வு காலம் 2 ஆண்டுகளாகும். கூடுதல் விவரங்களுக்கு தபால் நிலையங்கள், பொதுத்துறை வங்கிகளை அணுகவும்.